Monday, January 9, 2012

தாக்கு (attack)

தாக்கு எனும் சொல் தமிழா?

காலபோக்கில் தமிழ் பல மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கியிருக்கிறது,இதுபோன்ற வேற்று மொழி சொற்களை ஆங்கிலத்தில் கடன் சொற்கள் (loan words) என்று குறிப்பிடப்படுகிறது.அத்தகைய ஒரு சொல்தான் "தாக்கு".

தாக்கு என்ற சொல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மற்றும் தமிழ் என்று கருதியிருக்கும் ஒரு சொல்.இது பல்வேறு பொருள்களில் தமிழ் மொழியில் வழங்கபடுகிறது அவை

௧)தாக்கு - அடி(attack)

எ.கா :- மறைதிருந்து தாக்கு.

௨)தாக்கம் - விளைவு(impact/influence)

எ.கா :- வெப்பத்தின் தாக்கம் (அல்லது) புயலின் தாக்கம்


அப்படியானால் இந்த சொல்லின் வரலாறென்ன?

தாக்கு என்பது மராட்டி மொழி சொல்,இச்சொல் மராட்டி மொழியில் டாக்(thak) என்று ஒலிக்கப்படுகிறது இதன் பொருள் போடு(எறி) என்பதாகும்.தாக்கு என்பதற்கான சரியான தமிழ் சொல் "பதிகை" என்பதாகும்.

மேற்கண்ட செய்தி தவறு என்று யாரேனும் கருதினாலோ அல்லது யாருக்கேனும் மாற்று கருத்திருந்தாலோ, தங்களது கருத்தை பதிவுசெய்யுமாறு வேண்டுகிறேன்.

Sunday, January 8, 2012

ஊர்திகளுக்கான தமிழ் சொற்கள்

Aeroplane - வானூர்தி

Bus - பேருந்து

Car - மகிழுந்து

Cycle rickshaw - மிதியிழுவை

Jeep - கரட்டுந்து

Lorry - சரக்குந்து

Motor Cycle - விசையுந்து

Scooter - குதியுந்து

Train/Rail - தொடருந்து

Van - கூண்டுந்து


உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டுகிறேன்.

Sunday, December 18, 2011

அன்றாடவாழ்க்கையில் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள்(௧).

Academy - கழகம்

Accident - நேர்ச்சி

Agency - முகவாண்மை

Agent - முகவர்

Alarm - அலறி

Allergy - ஒவ்வாமை

Ambulance - நொயர் உந்து

Antenna - உணர் சட்டம்

Apartment - அடுக்ககம்

Appointment - அமர்த்தம்

Approval - ஒப்புதல்

Arrears - நிலுவை

Attendance - வருகை

Attestation - சான்றோப்பம்

Automobile - தானியங்கி

Sunday, November 20, 2011

வேற்று மொழி சொற்கள்

நாம் தமிழென்று நினைத்துக்கொண்டிருக்கும் வடமொழி சொற்கள்.




நண்பர்களே நீங்கள் சில சொற்களை பார்த்தபிறகு "என்ன இந்த சொல் தமிழ் இல்லையா!"
என வியந்திருப்பீர்கள்.முதல் முறை எனக்கும் அவ்வாறே இருந்தது, ஆனால் அவை தமிழ்
அல்ல என்பதே உண்மை.ஆகையால் இனியாவது மேற்கண்ட வடமொழி சொற்களுக்கு நிகரான
தமிழ் சொற்களை பயன்படுத்துங்கள்.

Saturday, November 19, 2011

வணக்கம்

தமிழ் கூரும் நல்லுலகுக்கு வணக்கம்!!!