Saturday, March 3, 2012

தமிழ் எண்கள்(Tamil Numerals)

பண்டய தமிழர்கள் பயன்படுத்திய எண்முறை.

பதின்பெருக்கம்(Multiples of ten)

10 - பத்து

100 - நூறு

1000 - ஆயிரம்

10^4 - பத்தாயிரம்

10^5 - நூறாயிரம்

10^6 - மெய்யிரம்

10^9 - தொள்ளுண்

10^12 - ஈகியம்

10^15 - நெளை

10^18 - இளஞ்சி

10^20 - வெள்ளம்

10^21 - ஆம்பல்

போது பின்னங்கள்(Common Factors)

1/4 - கால்

1/2 - அரை

3/4 - முக்கால்

1/5 - நாலுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி

1/20 - ஒருமா

1/40 - அரைமா

1/80 - காணி

1/160 - அரைக்காணி

மெய்எண்கள்(Cardinal numbers)

௦ - சுழியம்(zero)

௧ - ஒன்று(one)

௨ - இரண்டு(two)

௩ - மூன்று(three)

௪ - நான்கு(four)

௫ - ஐந்து(five)

௬ - ஆறு(six)

௭ - ஏழு(seven)

௮ - எட்டு(eight)

௯ - ஒன்பது(nine)

Friday, February 10, 2012

அன்றாடவாழ்க்கையில் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள்(௩)

உங்களது தமிழ் சொல்வளத்தை மேம்படுத்திகொள்ளுங்கள்.

தமிழ்ச் சொற்கள்


இவ்விடுகைகுறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.

அன்றாடவாழ்க்கையில் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள்(௨)

Bakery - அடுமனை

Battery - மின்கலம்

Bench - விசி

Badge - அடையாளவில்லை

Biscuit - மாச்சில்லு

Boots - புதையடி

Bulb - குமிழ்

Bunk - நிலைப்பேழை

Buzzer - இமிரி

Camp - படப்பற்றி

Camp - தங்கல்

Cash receipt - பணவரவு முறி

Cement - பைஞ்சுதை

Chalan - செலுத்து முறி

Challenge - அறைக்கூவல்

Champion - வல்லவன்

Coil - சுருணை

Compass - வட்ட வரையி

Concrete - திண்காரை

Consultant - கலந்தாயுனர்

Container - கொள்கலம்

Monday, February 6, 2012

தமிழில் இயற்பியல்

வணக்கம் நண்பர்களே,

அண்மையில் இணையத்தில் உலா வரும் காலையில் கீழுள்ள இணைப்பியில்(link)உள்ள நிகழ்படத்தை கண்டேன் அதில் முனைவர் டி.எஸ் சுப்பராமன் இயற்பியல் கோட்பாடுகளை தமிழில் வெண்பாக்களாக இயற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றை இந்நிகழ்படத்தில் குறிப்பிடுகிறார் கண்டுமகிழுங்கள்.

--> இணைப்பி

இவ்விடுகைகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

Monday, January 9, 2012

தாக்கு (attack)

தாக்கு எனும் சொல் தமிழா?

காலபோக்கில் தமிழ் பல மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கியிருக்கிறது,இதுபோன்ற வேற்று மொழி சொற்களை ஆங்கிலத்தில் கடன் சொற்கள் (loan words) என்று குறிப்பிடப்படுகிறது.அத்தகைய ஒரு சொல்தான் "தாக்கு".

தாக்கு என்ற சொல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மற்றும் தமிழ் என்று கருதியிருக்கும் ஒரு சொல்.இது பல்வேறு பொருள்களில் தமிழ் மொழியில் வழங்கபடுகிறது அவை

௧)தாக்கு - அடி(attack)

எ.கா :- மறைதிருந்து தாக்கு.

௨)தாக்கம் - விளைவு(impact/influence)

எ.கா :- வெப்பத்தின் தாக்கம் (அல்லது) புயலின் தாக்கம்


அப்படியானால் இந்த சொல்லின் வரலாறென்ன?

தாக்கு என்பது மராட்டி மொழி சொல்,இச்சொல் மராட்டி மொழியில் டாக்(thak) என்று ஒலிக்கப்படுகிறது இதன் பொருள் போடு(எறி) என்பதாகும்.தாக்கு என்பதற்கான சரியான தமிழ் சொல் "பதிகை" என்பதாகும்.

மேற்கண்ட செய்தி தவறு என்று யாரேனும் கருதினாலோ அல்லது யாருக்கேனும் மாற்று கருத்திருந்தாலோ, தங்களது கருத்தை பதிவுசெய்யுமாறு வேண்டுகிறேன்.