Monday, January 9, 2012

தாக்கு (attack)

தாக்கு எனும் சொல் தமிழா?

காலபோக்கில் தமிழ் பல மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கியிருக்கிறது,இதுபோன்ற வேற்று மொழி சொற்களை ஆங்கிலத்தில் கடன் சொற்கள் (loan words) என்று குறிப்பிடப்படுகிறது.அத்தகைய ஒரு சொல்தான் "தாக்கு".

தாக்கு என்ற சொல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மற்றும் தமிழ் என்று கருதியிருக்கும் ஒரு சொல்.இது பல்வேறு பொருள்களில் தமிழ் மொழியில் வழங்கபடுகிறது அவை

௧)தாக்கு - அடி(attack)

எ.கா :- மறைதிருந்து தாக்கு.

௨)தாக்கம் - விளைவு(impact/influence)

எ.கா :- வெப்பத்தின் தாக்கம் (அல்லது) புயலின் தாக்கம்


அப்படியானால் இந்த சொல்லின் வரலாறென்ன?

தாக்கு என்பது மராட்டி மொழி சொல்,இச்சொல் மராட்டி மொழியில் டாக்(thak) என்று ஒலிக்கப்படுகிறது இதன் பொருள் போடு(எறி) என்பதாகும்.தாக்கு என்பதற்கான சரியான தமிழ் சொல் "பதிகை" என்பதாகும்.

மேற்கண்ட செய்தி தவறு என்று யாரேனும் கருதினாலோ அல்லது யாருக்கேனும் மாற்று கருத்திருந்தாலோ, தங்களது கருத்தை பதிவுசெய்யுமாறு வேண்டுகிறேன்.

1 comment: